தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, மே 06, 2018

வலி.வடக்கில் வளமான பகுதிகள் இன்றும் இராணுவத்தின் பிடியில்! முதலமைச்சர்

வலி.வடக்கில் வளம்கொளிக்கும் பிரதேசங்களைத் தொடர்ந்தும் இராணுவமே கையகப்படுத்தியுள்ளது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் மீள்குடியேற்றத்தில் இன்னும் பல செய்ய வேண்டியுள்ளது,குறிப்பாக இராணுவத்தினர் இன்னும் முக்கியமான வளமான பகுதிளைத் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்.

மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டு அதில் புதிய கட்டடங்கள் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான கட்டங்களை இடிக்காமல் அதை அவ்வாறே நிர்வகிப்பமை தொடர்பிலும் ஆராய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சந்திப்பில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான பொ.ஐங்கரநேசன், ப.கஜதீபன் வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் எஸ்.சுகிர்தன், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிவசிறி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.