தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், மே 03, 2018

சர்வதேச ஊடக சுதந்திர தினம் - யாழ்ப்பாணத்தில் அஞ்சலிசர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்று, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூரும் நிகழ்வு யாழ். நகரில் அமைந்துள்ள
ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் இடம்பெற்றது. யாழ்.மாநகர மேயர் இ.ஆனோல்ட் மறைந்த ஊடகவியலாளர்கள் நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்தார். தொடர்ந்து, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவிஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பலரும் பங்கேற்று, மலர் தூவி அஞ்சலி செலுத்தின