www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், மே 10, 2018

முள்ளிவாய்க்காலில் முதன்மைச் சுடரை ஏற்றமாட்டேன்! - முதலமைச்சர் அறிவிப்பு

வடக்கு மாகாண சபை­யின் ஏற்­பாட்­டில் இடம்­பெ­ற­வுள்ள முள்­ளி­வாய்க்­கால் நினைவேந்தல் நிகழ்வில், முதன்மை ஈகச்சுடரை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளில் யாரா­வது ஒரு­வர் ஏற்­றட்­டும். நான் ஏற்ற மாட்­டேன் என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.
வடக்கு மாகாண சபை­யின் ஏற்­பாட்­டில் இடம்­பெ­ற­வுள்ள முள்­ளி­வாய்க்­கால் நினைவேந்தல் நிகழ்வில், முதன்மை ஈகச்சுடரை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளில் யாரா­வது ஒரு­வர் ஏற்­றட்­டும். நான் ஏற்ற மாட்­டேன் என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

பொது அமைப்­புக்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டல் முத­ல­மைச்­சர் அலு­வ­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்­றது. இதன்­போதே முதலமைச்சர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

வடக்கு மாகாண சபை ஒருங்­கி­ணைக்­கும் முள்­ளி­வாய்க்­கால் நினைவு தினத்­தில் முதன்மை ஈகைச் சுடரை போரால் பாதிக்­கப்­பட்ட அல்­லது உற­வு­க­ளைப் பறி­கொ­டுத்த தரப்­புக்­க­ளில் இருந்து யார­வது ஒரு­வர் அதனை ஏற்ற வேண்­டும். முதன்மை ஈகச் சுடரை நான் ஏற்ற மாட்­டேன் என்­பதை உறு­தி­பட தெரி­வித்­துக் கொள்­கி­றேன் என்­றார்.

அதே­வேளை கூட்­டத்­தில் கலந்து கொண்ட பொது அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­கள் பொதுச் சுடரை யார் ஏற்­று­வது என்­பது தொடர்­பி­லேயே பல பிரச்­ச­னை­கள் உரு­வா­கின்­றன. அந்த விட­யத்­தில் உங்­க­ளின் முடிவு வர­வேற்­கத்­தக்­கது. அன்­றைய தினம் வடக்கு மாகாண சபை சார்­பாக ஒரு அறி­வித்­தல் உரையை மாகாண முதல்­வர் என்ற ரீதி­யில் நீங்­கள் மேற்­கொள்ள வேண்­டும். அது உல­கத்­துக்கு எமது பிரச்­ச­னை­களை எடுத்­துக் கூறும் உரை­யாக அமைய வேண்­டும் என்று குறிப்­பிட்­ட­னர்.

இந்­தச் சந்­தர்ப்­பத்­தில் வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராஜா, முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லில் உரை­யாற்­று­வது எந்­த­ள­வுக்கு சாத்­தி­யப்­ப­டும் என்று தெரி­ய­வில்லை. அவ்­வா­றான உரை நிகழ்த்­து­வ­தாக இருந்­தால் முதல் நாளே ஊட­கங்­கள் ஊடாக அதை வெளி­யி­டு­வது பொருத்­த­மாக இருக்­கும் – என்­றார்.

அதேவேளை, தமி­ழர் இன அழிப்­பின் அடை­யா­ள­மான முள்­ளிவாய்க்­கா­லின் 10ஆம் ஆண்டு நினை­வேந்­தல் நாள் அடுத்த ஆண்டு பேரெ­ழுச்­சி­யு­டன் கடைப்­பி­டிக்­கப்­ப­டும். வடக்கு மாகாண அரசு இல்­லா­வி­டி­னும் நினை­வேந்­தலை தொடர்ந்து நடத்­து­வ­தற்­காக பொது அமைப்­புக்­க­ளின் பங்­க­ளிப்­பு­டன் சுயா­தீ­னக் குழு நிறு­வப்­ப­டும் என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரிவித்தார்.

“ முள்­ளி­வாய்க்­கால் நினைவு தினத்தை கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக வடக்கு மாகாண சபையே ஒருங்­கி­ணைத்து வரு­கின்­றது. இந்த ஆண்­டும் நாமே ஒருங்­கி­ணைத்து நடாத்­தத் தீர்­மா­னித்து எம்­மு­டன் இணைந்து செயற்­பட ஆர்­வம் உள்ள பொது அமைப்­புக்­க­ளுக்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தேன். அந்த அழைப்பை ஏற்று வந்த பொது அமைப்­புக்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­னோம். அதில் பல­ரும் பல­வா­றான கருத்­து­களை முன்­வைத்­த­னர்.

வடக்கு மாகாண சபை­யின் ஆயுள்­கா­லம் நடப்­பாண்­டு­டன் நிறை­வ­டை­ய­வுள்­ளது. அத்­து­டன் முள்­ளி­வாய்க்­கால் நினைவு தினத்­தின் பத்­தாண்டு நிறைவு அடுத்த ஆண்­டா­கும். அந்த நினைவு நாளை நாம் உணர்­வு­பூர்­வ­மாக பேரெ­ழுச்­சி­யு­டன் கடைப்­பி­டிக்­கத் தீர்­மா­னித்­துள்­ளோம். முள்­ளி­வாய்க்­கால் நினைவு தினத்தை ஆண்­டு­தோ­றும் ஒருங்­கி­ணைத்து நடத்த அனைத்­துச் சமூக மட்ட அமைப்­புக்­க­ளை­யும் இணைத்­துக் குழுவை அமைக்­க­வுள்­ளோம் என்­றார்.