புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, மே 04, 2018

கஜேந்திரகுமார் தனது குடும்பத்திற்கும், கட்சிக்கும் தலைவராக இருக்கட்டும்அவர் பிரபாகரனாக முடியாது’ ஜனநாயகப் போராளிகள் விமர்சனம்

“கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது குடும்பத்திற்கும், அவரது கட்சி உறுப்பினர்களுக்கும் மாத்திரம் தலைவராக இருக்கட்டும். அவரினால், தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாக முடியாது. இனியாவது இவ்வாறான கேலிக்கூத்துக்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று ஜனநாயகப் போராளிகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ‘மே’ தினக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமே ‘தமிழினத்தில் இறுதித் தலைவர்’ என்றும் தலைவர் பிரபாரனோடு ஒப்பிட்டும் அவரது கட்சி முக்கியஸ்தர்களினால் கருத்து வெளியிடப்பட்டிருந்தது. இது, மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையிலேயே, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பேச்சாளர் எஸ்.துளசி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்