புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

புதன், மே 30, 2018

சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

 ராஜபாளையத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ஒரு தனியார் தொலைக்காட்சியில் “சொல்வதெல்லாம் உண்மை” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். அவர் பல்வேறு தனிமனித, குடும்ப பிரச்சினைகளில் தலையிடுகிறார். மேலும் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் காரசாரமான விவாதங்கள், தொகுப்பாளரின் கேள்விகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பெண்களுக்கு சரியான முறையில் மரியாதை அளிப்பதில்லை. விவரம் தெரியாத ஆண்-பெண்களை குறிவைத்து இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. குறிப்பாக இந்நிகழ்ச்சி டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக நடத்தப்படுகிறது. இது தனிமனித சுதந்திரத்தை பாதிப்பதாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும்“ என கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதுகுறித்து மத்திய-மாநில அரசுகளுக்கும், தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 18-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்