சனி, மே 12, 2018

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் - மிருசுவிலில் நிகழ்வு


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, இன்று காலை மிருசுவில் பகுதியில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. வட மாகாணசபை
உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் ஈகச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.