புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, மே 04, 2018

இலஞ்சம் பெற்ற போது மாட்டினார் ஜனாதிபதி செயலக உயர் அதிகாரி!

ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதம அதிகாரியான பேராசியர் ஐ.கே மஹனாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகிய இருவரையும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்திய வர்த்தகர் ஒருவரிடம், 10 கோடி ரூபா இலஞ்சம் கேட்கப்பட்டு அதில் 2 கோடி ரூபா பணத்தை கைமாற்றும் போதே இவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர உணவகம் ஒன்றில் இந்த பணப்பரிமாற்றம் இடம்பெறும் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனது.

இதனிடையே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி ​செயலகத்தின் தலைமை அதிகாரி பேராசிரியர் ஐ.கே மஹனாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகிய இருவரையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவினால் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குறித்த இரு அதிகாரிகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுதாகவும் அவர்களுக்கு எதிராக எவ்வித தடைகளும் இல்லாமல் சட்டம் சரியான முறையில் நிறைவேற்றப்படும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது