தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், மே 03, 2018

காரைநகரில் பாடசாலைக் காணியை ஆக்கிரமித்து கடற்படை முகாம்

காரை­ந­கர் இந்­துக் கல்­லூரி வளா­கத்­தில் கடற்­ப­டை­யி­னர் முகாம் அமைக்­கும் பணி­யைத் தொடர்ந்து மேற்­கொண்டு வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. கடற்­ப­டை­யி­னர் முகாம் அமைக்­கும் நோக்­கு­டன் பாட­சா­லைக் காணி­யைப் புல்­டோ­சர் மூலம் துப்­பு­ரவு செய்­த­போது பாட­சாலை நிர்­வா­கம் காரை­ந­கர் பிர­தேச சபைத் தலை­வர், உப தலை­வர் ஆகி­யோரை அழைத்­து க்­கொண்டு சென்று இது பாட­சா­லைக்­கு­ரிய காணி இதில் முகாம் அமைப்­பதை நிறுத்­து­மாறு கோரிக்கை விடுத்­தது.

மறு­தி­னம் சாத­க­மான பதி­லைத் தரு­வ­தா­கக் கூறிய கடற்­ப­டை­யி­னர் இர­வோடு இர­வாக பாட­சா­லைக் காணி­யின் குறிப்­பிட்­ட­ளவு நிலப்­ப­ரப்­பி­னைக் கைய­கப்­ப­டுத்தி முட்­கம்பி வேலி அமைத்து முகாம் அமைக்­கும் பணி­யி­னைத் தொடர்ந்து முன்­னெ­டுத்­துள்­ள­னர். இத­னால் பாட­சாலை மாண­வர்­க­ளும் பெற்­றோர்­க­ளும் அச்­சத்­தில் உறைந்­தி­ருப்­ப­து­டன் பாட­சாலை வளா­கத்­தில் கடற்­படை முகாம் அமைப்­ப­தால் பாட­சா­லைக்­குப் பிள்­ளை­களை அனுப்­பு­வ­தற்­கும் பெற்­றோர் அச்­சம் அடைந்­துள்­ள­னர்.

இது­வரை கால­மும் கல்­லூ­ரிக்கு சற்­றுத் தொலை­வில் இருந்த கடற்­ப­டை­யி­னர் தற்­போது பாட­சா­லைக் காணி­யில் முகாம் அமைப்­பது தொடர்­பாக நட­வ­டிக்கை எடுக்க அர­சி­யல்­வா­தி­கள் எவ­ரும் முன்­வ­ராமை குறித்து பாட­சாலை சமூ­கம் விச­னம் தெரி­வித்­துள்­ளது.

இந்­தப் பாட­சாலை அண்­மித்த பாட­சாலை சிறந்த பாட­சா­லைத் திட்­டத்­துக்­குத் தெரிவு செய்­யப்­பட்டு பாட­சா­லை­யின் அபி­வி­ருத்­திப் பணி­கள் முன்­னெ­டுப்­ப­தற்­காக பழைய மாண­வர்­க­ளால் பாட­சா­லை­யைச் சுற்­றி­யுள்ள காணி­கள் கொள்­வ­னவு செய்­யப்­பட்டு வழங்­கப்­பட்­டுள்­ள­து­டன் கட்­ட­டங்­கள் அமைக்­கும் பணி தொடங்க உள்ள நிலை­யில் கடற்­ப­டை­யி­னர் திடீ­ரென முகாம் அமைக்­கும் பணி­யினை மேற்­கொள்­வது குறித்­துப் பாட­சாலை சமூ­கம் அதி­ருப்தி அடைந்­துள்­ளது.