தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், மே 16, 2018

தனியார் பேருந்துகள் சேவைப்புறக்கணிப்பு!

தனியார் பேருந்துகள் நள்ளிரவு முதல் சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அகில இலங்கை தனியார் பேருந்து ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தாம் கோரிக்கை விடுத்த பேருந்து கட்டண சீர்திருத்த்திற்கு அமைச்சரவை இன்று அனுமதி வழங்காது, கட்டணத்தை 6.56 வீதமாக அதிகரிக்கவும், ஆரம்பக் கட்டணத்தில் எவ்விமாற்றமும்
செய்யாமல் தீர்மானம் எடுத்துள்ளது.

கடந்த 10 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்பையடுத்து பேருந்துக் கட்டணத்தை 15 முதல் 20 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று தனியார் பேருந்து ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

இருப்பினும் தமது கோரிக்கைக்கு அமைவாக அரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட நேர்ந்துள்ளது என்று அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.