புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, மே 04, 2018

புள்ளி திட்டத்தின் அடிப்படையில் வீடு வழங்காமல் அனைவருக்கும் வீடு வழங்குவது வரவேற்கத்தக்கது


புள்ளி திட்டத்தின் அடிப்படையில் வீடு வழங்காமல் அனைவருக்கும் பொதுவான திட்டத்தில் வீடு வழங்குவது வரவேற்கத்தக்கது வன்னி எம்.பி. சி.சிவமோகன் தெரிவிப்பு.

கடந்தகாலங்களில் புள்ளி திட்ட அடிப்படையில் வீடு வழங்குவதால் நிறைய வறுமைப்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒருவர்,இருவர் உள்ளவர்களுக்கு இன்னமும் வீடுகள் குடுக்கப்படவில்லை அவர்கள் எண்ணிக்கை குறைய கடந்த கால யுத்தம் தான் காரணம்.
பிள்ளைகளை இழந்த தாய்,தந்தை மற்றும் தாய், தந்தையை இழந்த பிள்ளைகள் என எண்ணிக்கை குறைக்கப்பட்டவர்களுக்கு திட்ட அடிப்படையில் வீடு இல்லாமல் போனது கவலைக்குரிய விடையம்.
ஆனால் இன்று சமட்ட செவண மாவட்ட வீடமைப்பு அமைச்சால் புள்ளித்திட்டம் இல்லாமல் அனைவருக்கும் வீட்டினை வழங்குவது வரவேற்கத்தக்கது என
02.05.2018 அன்று முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் அவ் கிராம மக்களால் ஒழுங்கு படுத்தபட்ட 2018மாதிரிக் கிராம வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வான வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே வன்னி எம்.பி.சி.சிவமோகன் இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.