புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

புதன், மே 09, 2018

கிளிநொச்சி மக்களுக்கான வறட்சி நிவாரணங்கள்

கிளிநொச்சி, கரைச்சிப்பிரதேசத்தில் 1,088 குடும்பங்களுக்கு வறட்சிக்கான உலர் உணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், 1,278 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கரைச்சிப்பிரதேச செயலர் ரி.முகுந்தன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேசத்தின் வறட்சி நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அனர்த்த முகாமைத்துவத்தின், வறட்சியினால் பாதிக்கப்பட்ட 1,088 விவசாயக்குடும்பங்களுக்கான வறட்சி நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது 1278 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன்படி, அக்கராயன் குளம் பிரதேசத்தில் 465 குடும்பங்களுக்கும், பொன்னகர் பகுதியில் 142 குடும்பங்களுக்கும், பாரதிபுரம் பகுதியில் 130 குடும்பங்களுக்கும், மலையாளபுரம் பகுதியில் 45 குடும்பங்களுக்கும், விவேகானந்தநகர் பகுதியில் 10 குடும்பங்களுக்கும், கிருஸ்ணபுரம் பகுதியில் 234 குடும்பங்களுக்கும், உதயநகர் கிழக்குப்பகுதியில் 5 குடும்பங்களுக்கும், அம்பாள்நகர் பகுதியில் 220 குடும்பங்களுக்கும், கணேசபுரம் பகுதியில் 27 குடும்பங்களுக்கும் இவ்வாறு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.