தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், மே 30, 2018

சிறுபான்மை மதத்தினர் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன! - அமெரிக்கா குற்றச்சாட்டு

இலங்கையில் மத வழிபாட்டுத்தலங்கள் மீதும், மதத் தலைவர்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாக
அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மதச் சுதந்திரம் பற்றிய வருடாந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் மத வழிபாட்டுத்தலங்கள் மீதும், மதத் தலைவர்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மதச் சுதந்திரம் பற்றிய வருடாந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாகவும், வழிபாட்டு நிகழ்வுகள் மீது தாக்குதல் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அமெரிக்க அறிக்கையிலவ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலும் இலங்கையில் சிறுபான்மை மதத்தினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.