வியாழன், மே 10, 2018

வெள்ளை வான் கடத்தல் கலாசாரம் தற்போது இல்லை

2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றியை அனுபவிக்கும் முகமாக ஏதாவது நல்லாட்சி அரசு சாதித்திருக்கின்றதா என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

எனினும் தற்போது நாட்டில் தைரியமாக தங்களின் கருத்தை வெளிப்படுத்த சுதந்திரம் உண்டு என்றும் தற்போது ஒருவருக்கும் மரண பயம் ஏற்படுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் எவரை வேண்டுமானாலும் குற்றம் காணும் சுதந்திரம் உள்ளதாகவும் இன்று வரை ஒருவரும் காணாமல் போகவில்லை எனவும் வெள்ளை வான் கடத்தல் கலாசாரம் தற்போது காணப்படுவதும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறான செயல்கள் நடைப்பெற்றது தான் அங்கம் வகித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திலே என்றும் மேர்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் செயல்களுக்கு முன்னாள் பாதுகாப்பு செய்லாளர் பொறுப்பு கூற வேண்டும் எனவும் தற்போது நீதி சட்டம் முறையாக நடைமுறைபடுத்தப்படுவதாகவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.