தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், மே 10, 2018

பாலியல் தொல்லை என்பது சோடிப்பாம்! - ரயில்வே ஊழியருக்கு வக்காலத்து வாங்கிய யாழ். சட்டத்தரணி

தமிழ்ப் பெண்ணுக்கு ரயில்வே ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது தவறான சோடிப்பு என்று, அவரது சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி றெமிடியஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பெண்ணுக்கு ரயில்வே ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது தவறான சோடிப்பு என்று, அவரது சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி றெமிடியஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற ரயிலில் பயணித்த பிரிட்டன் வாழ் குடும்பபப் பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொண்ட ரயில்வே ஊழியர், யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று முன்தினம் மதியம் கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் பின்னர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று பிற்பகல் அவர் முற்படுத்தப்பட்டார்.

இதன்போது பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ரயில்வே ஊழியருக்கு எதிராக முதல் அறிக்கையை பொலிஸார் மன்றில் சமர்ப்பித்தனர்.

இதன்போது சந்தேக நபரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி றெமீடியஸ், ரயிலில் மூன்றாம் வகுப்பு ஆசனத்துக்கு கட்டணம் செலுத்தி விட்டு இரண்டாம் வகுப்பு ஆசனத்தில் அமர்ந்திருந்ததாலேயே பெண் பயணியிடம் ரயில்வே ஊழியர் முரண்பட்டாரே தவிர அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற விடயம் தவறானான ஒர் சோடிப்பு என்று வாதிட்டார்.

அத்துடன் அவரைப் பிணையில் விடுவிக்க விண்ணப்பம் செய்தார். இதனை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்