தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், மே 16, 2018

மகாஜனக் கல்லூரி இறுதிக்குச் சென்றது!!

வட­மா­காண கல்­வித் திணைக்­க­ளம் நடத்­தும் வட­ மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத்­தில் 20 வயது பெண்­கள் பிரி­வில் இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி.

கன­க­ரத்­தி­னம் மத்­திய மகா வித்­தி­யா­லய மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்ற அரை­யி­று­தி­யாட்­டத்­தில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணியை எதிர்த்து மட்­டு­வில் சந்­தி­ர­பு­ரஸ்­கந்­த­வ­ரோ­தயா மகா வித்­தி­யா­லய அணி மோதி­யது.

ஆட்­டம் ஆரம்­பம் முதல் ஆதிக்­கம் செலுத்­தி­யது தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி. 3ஆவது, 8ஆவது நிமி­டங்­க­ளில் சரண்யா அடுத்­த­டுத்து இரண்டு கோல்­க­ளைப் பதி­வு­செய்ய 2:0 என்று வலு­வான ஆதிக்­கம் செலுத்­தி­யது தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி.

14ஆவது நிமி­டத்­தில் யோகிதா மற்­றொரு கோலைப் பதி­வு­செய்ய முதல் பாதி­யின் முடி­வில் 3:0 என்ற கோல் கணக்­கில் வலு­வான ஆதிக்­கம் செலுத்­தி­யது மகா­ஜ­னக் கல்­லூரி அணி. இரண்­டா­வது பாதி­யில் கௌசி, சரண்யா இரு­வ­ரும் கோல்­க­ளைப் பதி­வு­செய்ய முடி­வில் 5:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று இற­திக்­குத் தகுதி பெற் றது தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி.