புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், மே 15, 2018

வடக்கில் மருத்துவர்கள், தாதியர் வெற்றிடங்களை நிரப்புமாறு சுகாதார அமைச்சர் உத்தரவு

வட மாகாணத்தில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
வட மாகாணத்தில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் புதிதாக ஒசுசல நிலையங்களை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களின் வைத்திய துறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் சுகாதார அமைச்சில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் வைத்தியசாலைகளின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் தனக்கு தனித்தனி அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்