தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், மே 10, 2018

மைத்திரியிடம் மண்டியிட்டார் பீல்ட் மார்சல்

அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்னிப்புக் கோரினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று பகல் இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பு முடிந்த பின்னர், அமைச்சர் சரத் பொன்சேகா மற்றும் சிலர் ஜனாதிபதியிடம் சென்று மன்னிப்புக் கோரியுள்ளனர்.

அமைச்சர் சரத் பொன்சேகா கடந்த 3ஆம் திகதி தனது புதிய அமைச்சினை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதனையடுத்து கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் இதுதொடர்பில் ஜனாதிபதியும் விமர்சித்திருந்தார்