தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், மே 30, 2018

ஜனாதிபதி, கூட்டமைப்பினை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை பலப்படுத்தும் நோக்கில் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து
கட்சிகளையும் சந்திக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(30) இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியை பலப்படுத்துவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சிகளின் பரிந்துரைகளையும் யோசனைகளையும் கோரியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் சுமார் 30 கட்சிகள் அங்கம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது