தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், மே 07, 2018

கனடாவில் கொல்லப்பட்ட இலங்கைப் பெண்ணின் மகனுக்காக மூன்றரை இலட்சம் டொலர்கள் சேகரிப்பு

கனடாவில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் இறுதி அஞ்சலி நேற்றைய தினம் இடம்பெற்றது. இதில், நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் கலந்து கொண்டனர். கடந்த மாதம் இறுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 45 வயதான ரேனுகா அமரசிங்க என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார்.

இலங்கையின் ஹொரண பகுதியில் பிறந்த ரேனுகா, பல வருடங்களுக்கு முன்னர் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து குடியுரிமையை பெற்றிருந்தார்.பலியான ரேனுகாவுக்கு ஏழு வயதில் மகன் உள்ளார். கணவன் இல்லாத நிலையில் அவர் அமைதியான முறையில் ரொரன்டோவில் வாழ்ந்து வந்துள்ளார்.பாடசாலையில் மகனை விட சென்று மீண்டும் திரும்பும் போது இடம்பெற்ற பயங்கரவாத வாகன தாக்குதலில் சிக்கி அவர் உயிரிழந்திருந்தார்.

தாய், தந்தையை இழந்திருந்த அவரின் மகன் Diyonனுக்கு 150,000 டொலர் உதவித் தொகை தேவையாக உள்ளதென GoFundMe பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் எதிர்பார்த்ததை விடவும் அதிகமான பணம் ரேனுகாவின் மகனுக்கு கிடைத்துள்ளது. அதற்கமைய 350,000 டொலர் பணம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது