தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், மே 03, 2018

கனடா செல்ல முயன்ற பாடகி மாயாவுக்கு லண்டனில் தடை

இலங்கையை பூர்வீகமாக கொண்ட- சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாடகி மாயா எனப்படும், மாதங்கி அருள்பிரகாசம், லண்டனில் இருந்து கனடா செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆவணப்படம் ஒன்றை திரையிடுவதற்கு கனடா செல்ல முயன்ற மாயா விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை என பிரித்தானிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட- சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாடகி மாயா எனப்படும், மாதங்கி அருள்பிரகாசம், லண்டனில் இருந்து கனடா செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆவணப்படம் ஒன்றை திரையிடுவதற்கு கனடா செல்ல முயன்ற மாயா விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை என பிரித்தானிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் 42 வயதான மாயா தனது Instagram வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தான் கனடா செல்ல விமானத்தில் அனுமதிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். தனது புதிய படத்தைப் பற்றி பாராட்டி பேசுவதை நிறுத்தும் முயற்சியில் 'மர்மமான நபர் ஒருவர் ஈடுபட்டுள்ளார் என மாயா குறிப்பிட்டுள்ளார்.

“பொறாமை ஒரு பயங்கரமான விடயம்” என குறிப்பிட்டவர் ஆவணப்படம் ஒன்றை திரையிடுவதற்காக தான் கனடா செல்ல முயற்சித்த போது லண்டன் விமான நிலையத்தில் தன்னை விமானத்தில் பயணிக்க அனுமதிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2017ஆம் ஆண்டு ஒரு பிரச்சினைக்குரிய விடயத்தில் எனது பெயரை மர்மமான நபர் ஒருவர் முத்திரையிட்டுள்ளார்.அது யார் என யாருக்கும் தெரியவில்லை அல்லது எதனுடன் தொடர்புடையவர் என்றும் தெரியவில்லை. கனடா மற்றும் அமெரிக்காவிலும் எனது ஆவணப்படம் குறித்த பேச கூடாதென நினைக்கின்ற அந்த சக்திவாய்ந்த நபர் யாரென தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் மனிதாபிமானத்துடைய சிறந்த குடியேற்ற வழக்கறிஞர் யார்? என மாயா தனது டுவிட்டர் பக்கத்தில் வினவியுள்ளார்.அவர் தயாரித்துள்ள இந்த ஆவணப்படத்திற்கு ஜனவரி மாதம் அவர் விருதுகளையும் வென்றுள்ளார். முழுமையாக அந்த படம் மூலம் தனது இசைப்பயணத்திற்கு ஒரு சிறப்பான பாதை உருவாகும் என எண்ணிய மாயாவுக்கு தற்போது பா