புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

புதன், மே 30, 2018

சண் சீ கப்பல் அகதிகள் பற்றிய நாவல் கனடாவின் உயர் விருதுக்குப் பரிந்துரை

ஈழத் தமிழ் அகதிகள் தொடர்பான நூல் ஒன்று கனடாவின் உயர் அமேசன் (கு)பெஸ்ட் நாவல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கனடாவின் உயர் அமேசன் (கு) பெஸ்ட் நாவல் விருதுக்கு, 40ஆயிரம் டொலர் பணப்பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், கனடாவை சேர்ந்த செரோன் பாலா என்ற பெண் எழுதிய 'த போட் பீப்பிள்' என்ற நூலே இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து கனடாவுக்கு சென்று சண் சீ கப்பல் அகதிகளை இந்த நூல் மையப்படுத்தியுள்ளது. உள்நாட்டு போர் காரணமாக இலங்கையில் இருந்து சென்ற அகதிகளின் துன்பங்கள் அந்த நூலில் விபரிக்கப்பட்டுள்ளன. அத்துடன், கனடாவுக்கு சென்ற பின்னர் குறித்த இலங்கை அகதிகளின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இந்த நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.