தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், மே 10, 2018

முடிவின்றி திண்டாடும் முள்ளிவாய்க்கால்!

முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் நிகழ்வை யார் நடத்துவது தொடர்பில் இன்னமும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை. வடக்கு மாகாண சபையினர் தாம் எடுத்த முடிவை கூடடங்கள் ஊடாகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினர் தாம் எடுத்த முடிவை அறிக்கை மூலமாகவும் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்திய வண்ணம் உள்ளனர்.

இது தொடர்பான விவாதங்கள் கடந்த மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும் இன்னமும் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவில்லை.

அதேவேளை வடக்கு மாகாண சபையுடன் இணைந்து முள்ளிவாய்க்கல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஒன்றியத்தினரை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் ஏற்பாடுகள் தொடர்பாக வடக்கு மாகாண சபையினருடன் இன்று கலந்துரையாடினார். இதில் அவர் தெரிவித்ததாவது,

முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் வடக்கு மாகாண சபை நினைவேந்தல் நிகழ்வை நடத்தத் தீர்மானித்துள்ளது. இதில் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து அஞ்சலி செலுத்தலாம். இது தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு மாணவர் ஒன்றியத்தினரை மீண்டும் அழைக்கின்றேன் என்றார்.

அதேவேளை முள்­ளி­வாய்க்­கால் நினை­வா­ல­யத்தில் நினை­வேந்­தல் நிகழ்வை நடத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரு­ட­னும், அமைச்சர்களுடனும் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­யம் கலந்­து­ரை­யா­டாது என்று அந்­தச் சங்­கத்­தின் தலை­வர் கிருஸ்­ண­மே­னன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.