புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

புதன், மே 30, 2018

செய்தியாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து யாழ். நகரில் கண்டன ஆர்ப்பாட்டம்!

காலைக்கதிர் நாளிதழின் பிரதேச செய்தியாளரும் பத்திரிகை விநியோகஸ்தருமான செ.இராஜேந்திரன் மீது கொழும்புத்துறையில், மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலைக் கண்டித்து இன்று யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.யாழ். ஊடகவியலாளர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் விநியோகஸ்தருமான செ.இராஜேந்திரன் மீது திங்கட்கிழமை அதிகாலை 10 பேர் கொண்ட இனம்தெரியாத கும்பலொன்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதில் குறித்த செய்தியாளர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது