தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், மே 07, 2018

நாளைய நிகழ்வுக்கு இன்று ஒத்திகை!

எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை பிற்பகல் 2:15க்கு ஆரம்பித்து
வைப்பார். முப்படையினர் அணிவகுக்க, நாடாளுமன்ற வளாகத்துக்கு வருகைதரும் ஜனாதிபதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 
அதன்பின்னர், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நாடாளுமன்றம் அன்று பிற்பகல் 2 மணிக்கு கூடும். அதன் பின்னர், நாடாளுமன்ற அமர்வு நிறுத்தம் மற்றும் நாடாளுமன்றத்தைக் கூட்டுதல் பற்றிய ஜனாதிபதியின் பிரகடனங்களை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் வாசிப்பார்.
ஜனாதிபதியை அழைத்துவரும் படை அணிவகுப்பில், குதிரைப்படை மற்றும் மோட்டார் படையணிகளும் அணிவகுத்து வரவிருக்கின்றன. அதற்கான விசேட ஒத்திகை, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெறவிருக்கின்றன.
கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தின் கொள்கை விளக்க அறிக்கையை விடுத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அவருடைய உரை நிறைவடைந்ததன் பின்னர், வேறெந்த நடவடிக்கைகளும் சபையில் முன்னெடுக்கப்பட மாட்டாது. சபை ஒத்திவைக்கப்படும்.
“இதேவேளை, நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கப்படுவதற்கான வைபவத்துக்கு, வி​சேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும்” என்று பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.
“விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, மேலதிக குழுக்கள் சில தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டார்.