புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், மே 10, 2018

புங்குடுதீவு குடி நீர்க்கிணறுகள் தூர் வாருவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை

சூழகம் அமைப்பின் அனுசரணையில் நேற்றைய தினம் புங்குடுதீவு மூன்றாம் வட்டாரப்பகுதியில் நான்கு கிணறுகள் சுத்தம் செய்யப்பட்டன . திரு . அழகேசன் , திரு . நகுலன் , திரு .சுதாகரன் , திரு. தினேஸ்வரன் , திரு .சுரேஷ் ஆகியோர் தமது தண்ணீர் பௌசர் + நீர் இறைக்கும் இயந்திரங்களை வழங்கியதோடு மாத்திரமல்லாது தூர்வாருகின்ற செயற்பாடுகளிலும் இணைந்திருந்தனர் . சாட்டி நீரை புங்குடுதீவு மக்கள் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை எமது புலம்பெயர் ஒன்றியங்கள் அறிந்துள்ளனவா ?

அவர்களது நிதியுதவியில் செயற்படுகின்ற ( வாழ்ந்து வருகின்ற ) அமைப்புக்களும் அது குறித்து அக்கறை கொள்வதாகயில்லை . புங்குடுதீவிலே குடிநீருக்கேற்ற சில கிணறுகள் தூர்வாராமல் பற்றைகள் நிறைந்து காணப்படுவதை நாம் அவதானித்துள்ளோம். மேலும் இச்செயற்பாட்டினை முழுமையாக மேற்கொள்வதன் மூலம் அதி தீவிர வரட்சி காலம் தவிர ஏனைய மாதங்களில் புங்குடுதீவு மக்கள் சாட்டியை நம்பியிருக்கத்தேவையில்லை .
இவ் உண்மையை அனைவரும் உணர்ந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும் . மேலும் இன்றைய தினம் நல்ல மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது . கடந்த வருடங்களிலும் மே மாதத்தின் இந்த வாரத்தில் ( மாணவி வித்தியா இறந்த தினம் ) ஒரு சில நாட்களாவது அதிக மழைவீழ்ச்சியை புங்குடுதீவு பெற்றிருக்கின்றது . ஆகவே இந்த தருணத்திலாவது கிணறுகளை சுத்தம் செய்து நன்னீரை தேக்கிவைப்பதற்கு முயற்சிப்பதே நன்று .
சூழகம் அமைப்பின் ஆதரவோடு வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் தலைமையில் புங்குடுதீவு உழவு இயந்திரம் + தண்ணீர் பௌசர் உரிமையாளர் சங்கத்தினரால் புங்குடுதீவு பகுதியில் கிணறுகளை தூர்வாரும் பணிகள் நேற்றுமுதல் ( 05 – 05 – 2018) ஆரம்பிக்கப்பட்டுள்ளன . மேற்படி அத்தியாவசிய செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு அனைத்து பொதுமக்களையும் கோரி நிற்கின்றோம் .