புதன், மே 09, 2018

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் கலந்துரையாடல்!

மே 18ஆம் திகதி நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கான அஞ்சலி நிகழ்வுகளை வட மாகாணசபையின் ஏற்பாட்டில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கலந்துரையாடலொன்று, இன்று வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நண்பகல் 12.00 மணியளவில் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.

இதில், வட மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் , வட மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் தவராசா மற்றும் யாழ். மறை மாவட்ட பங்கு தந்தையர்கள், ஜனநாயக போராளிகள் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.கடந்த 07ஆம் திகதி முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுதின அஞ்சலி நிகழ்வுகள் வட மாகாணசபையின் ஏற்பாட்டில் நடைபெறும் எனவும், அதில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட அமைப்புக்கள் தமக்கான பொறுப்புக்களைப் பெற்று நினைவேந்தல் நிகழ்வில் பங்களிப்பு செய்ய முடியும் எனவும் என வடக்கு முதல்வரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது