வியாழன், மே 10, 2018

மனோ கணேசனின் அடிமை மனோபாவம்! சிவாலிங்கம் சாட்டை

போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையில் சர்வதேச நாடுகளின் தலையீடுகள் அவசியமில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ள கருத்து சிங்கள பெளத்த அரசங்கத்தின் மீது அவர் கொண்டுள்ள அடிமை விசுவாசத்தையே வெளிப்படுத்துகின்றது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

' விக்லீஸ் வெளியிட்டிருந்த, இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் அனுப்பிய அறிக்கை ஒன்றில், அமைச்சர் மனோ கணேசன் போர்க்குற்ற விசாரணை அவசியமில்லை என கூறியிருந்ததாக குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான நிலையில் தற்போதும் அவர் தாம் அங்கம் வகிக்கக் கூடிய பௌத்த சிங்கள அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக அவர் கூறிய கருத்தானது வேதனையளிப்பதுடன் சிங்கள பௌத்த அரசாங்கத்தின் மீதான அவரது அடிமை விசுவாசத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது என்றார்.