புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, மே 04, 2018

பின்வரிசை எம்.பிக்களின் அதிருப்தி -

அமைச்சரவை மாற்றம் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உருவாகியுள்ள அதிருப்தி தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் குறித்தே இந்த பேச்சுகள் அமைந்திருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் பிரதியமைச்ராக அலி சாகீர் மௌலானா நியமிக்கப்பட்டமை குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் கடும் அதிருப்தி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தவேளை ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை மாற்றம் குறித்த தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இந்நிலையிலேயே பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று அடுத்தவாரம் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.