புதன், மே 09, 2018

ட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் என தீ பரவியுள்ளது

கட்டுநாயக்க விமான நிலைய கட்டிட தொகுதி ஒன்றில் இன்று தீ பரவியுள்ளது.

இந்நிலையில் தீ பரவல் காரணமாக விமான போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய தீயணைப்பு பிரிவு மற்றும் விமான படை தீயணைப்பு பிரிவு இணைந்து தீயணைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து கட்டுநாயக்க விமான நிலைய காவற்துறையினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.