புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், மே 10, 2018

தியாகி திலீபனின் சிலை மட்டக்களப்பில்

மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் உட்பட்ட வீதி சுற்று வட்டங்களில் தமிழர்கள் மரபை நிலை நிறுத்தும் வகையில் அன்னை பூபதி, தியாக திலீபன், ஜோசப்பரராசசிங்கம் ஆகியோர் சிலைகளை நிறுவுவதற்கு முன்வருமாறு கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் கு.குணசேகரம் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு, சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

”எமது கோறளைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் உட்பட்ட கிரான் சுற்று வட்டம், கும்புறுமூலை சுற்று வட்டம், வாழைச்சேனை பெற்றோல் நிலைய சுற்று வட்டம் ஆகிய மூன்று சுற்று வட்டங்களுக்கும் தமிழர்கள் அடையாளங்கள் அழிந்து வருவதால் அதனை தமிழர்கள் மரபை நிலை நிறுத்தும் வகையில் அன்னை பூபதி, தியாக திலீபன், ஜோசப்பரராசசிங்கம் ஐயா ஆகியோரின் சிலைகளை தமிழர்களின் அடையாளமாக நிறுவ வேண்டும் என்று தவிசாளரிடம் கோரிக்கையை முன் வைக்கின்றேன்.

மேலும் எமது கிராமங்களில் மணல் ஒழுங்கைகள் அதிகமாக காணப்படுகின்றன. வீதி விளக்குகளும் எமது வட்டாரத்திற்கு தேவைப்படுகிறன.” என்றார் அவர்