புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, மே 12, 2018

உறவினர்கள் துரத்தியதால் மின்கம்பத்தில் மோதியது மோட்டார் சைக்கிள்! - காதலி பலி, காதலன் கைது

திருகோணமலை, கட்டைப்பறிச்சான் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காதலி உயிரிழந்துள்ளார். அவரை ஏற்றிச் சென்ற காதலனை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை பதில் நீதவான் எம்.பீ.அன்பார், இன்று உத்தரவிட்டார்.

திருகோணமலை, கட்டைப்பறிச்சான் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காதலி உயிரிழந்துள்ளார். அவரை ஏற்றிச் சென்ற காதலனை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை பதில் நீதவான் எம்.பீ.அன்பார், இன்று உத்தரவிட்டார்.

வவுனியா, கிடாச்சூரி பகுதியைச் சேர்ந்த தெய்வலோகசிங்கம் விதூசிகா (17 வயது) என்ற இளம் பெண்ணெ சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். முல்லைதீவு, அலம்பில், கெனேடியன் வீதியைச் சேர்ந்த பிரபாகரன் அனுஷன் (23 வயது) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனும் யுவதியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், வீட்டாருக்குத் தெரியாமல் இளைஞனின் வீட்டுக்கு யுவதி வந்துள்ளார். எனினும், முல்லைதீவு பொலிஸ் நிலையத்தில் வைத்து யுவதி வீட்டாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, மீண்டும் இளைஞனைப் பிரித்து, சம்பூர் பகுதியிலுள்ள தனது உறவினர்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதனையடுத்து, மேற்படி யுவதி, காதலனுக்கு தான் சம்பூரில் இருப்பதாகவும் தன்னை அழைத்துச் செல்லுமாறும் கோரியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, காதலனான பிரபாகரன், சம்பூர் பகுதிக்குச் சென்று, மோட்டார் சைக்கிளில் காதலியை ஏற்றி வந்த வேளை, யுவதியின் உறவினர்கள் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதன்போது, குறித்த காதலர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் காதலி உயிரிழந்துள்ளார் என, பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் யுவதியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.