தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, மே 06, 2018

தமிழ் மக்களின் அரசியல் தீர்வை மையமாகக் கொண்டு கனடாவில் நடைபெறும் மாபெரும் மகாநாடு நேரலைகளில்!

உலகெங்கும் இருந்து கனேடிய தலைநகர் ஒட்டாவாவில் குழுமியுள்ள அறிவாளர்களும், மக்களும் பங்கெடுக்கும் இந்த மாநாடு சிறப்பாக ஒருங்கமைக்கப்பட்டு இனிதே ஆரம்பமாகவுள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க டொரோண்டோ, மொன்றியல், வினிப்பெக் மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து மக்கள் வந்துசேர்ந்த வண்ணமுள்ளனர். அனைவருக்கும் உணவு மற்றும் தங்குமிட வசதிகளும் ஒழுங்குபடுத்தப்படுள்ளது. மேலும் வர விருப்பும் மக்களுக்கும் வசதிகள் செய்ய ஒருங்கமைப்பாளர்கள் தயாராக உள்ளார்கள். உங்களுக்கான, உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கு உடன் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்: (647) 243 9396 Press # 2கனடாவில் நடைபெறவுள்ள தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட அறிஞர்களும் ஒட்டாவா விமான நிலையத்துக்கு வந்து சேராத தொடங்கியுள்ளனர். வந்து சேர்ந்த அனைவருக்கும் கனேடிய தமிழ் அமைப்புகள் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.


தமிழை தாய் மொழியாக்க கொண்ட அனைவரும் இம்மாநாட்டில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்பதே வருகை தந்துள்ள பேராசிரியர்கள், அறிவாளர்கள் மற்றும் ஒருங்கமைப்பாளர்களின் வேண்டுகோள்.

தமிழர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நேரலையாக இந்நிகழ்வை காண பின்வரும் இணைப்பில் காணலாம்.

இம்மாநாட்டில் இறுதி நிகழ்வாக தமிழர் அரசியல் மற்றும் அவர்களின் தனிநாடொன்றிக்கான தேவை போன்ற ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, பாராளுமன்றில் ஒருங்கமைக்கப்பட்டுள்ள நிகழ்வில் கனடாவின் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் உத்தியோகபூர்வமாக விளக்கமளிக்கப்படும்.

எதிர்வரும் காலங்களில் கனடா மற்றும் நேச நாடுகள் தமிழர்கள் குறித்து எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும், இந்த மாநாட்டின் ஆய்வறிக்கைகள் உதவும்.