www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

சனி, மே 05, 2018

இடிந்து விழும் தறுவாயில் இந்திய வீட்டுத்திட்டம் -உயிலங்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட உயிலங்குளம் கிராம அலுவலர் பிரிவில் அமைக்கப்பட்ட இந்திய வீடுகள் மக்கள் வாழ முடியாத நிலையில் இருப்பதாகவும், அதனை திருத்த அதிகாரிகள் முன்வராத பட்சத்தில் சுழற்சி முறையிலான உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் நேற்றையதினம் மாலை (04-05-2018) துணுக்காய் பிரதேச செயலகம் முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து பிரதேச செயலாளருக்கான மகஜர் ஒன்றினையும் கையளியத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது........

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உயிலங்குளம் கிராம அலுவலர் பிரிவில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட வீடுகள் மக்கள் வாழ முடியாத நிலையில் சுவர்கள் வெடித்து யன்னல் நிலைகள் அனைத்தும் பழுதடைந்து காணப்படுவதாகவும் எந்த ஒரு மழை காற்று வந்தாலும் இடிந்து விழக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் இதனால் வாழ அச்சப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக 2012 ம் ஆண்டு குறித்த பகுதியில் அமைத்து கொடுக்கப்பட்ட 50 வீடுகளில் யுத்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள் முன்னாள் போராளி குடும்பங்கள் என குடியமர்த்தப்பட்டனர்.

இவர்கள் குடியமர்த்தப்படும் போது 5 ஆண்டுகளில் காணிக்கான ஆவணங்கள் வழங்குவதாகவும், வீதிகள் புனரமைத்து குடிநீர் விநியோகம் உள்ளிட்ட சகல வசதிகளையும் ஏற்படுத்தி தருவதாக கூறியபோதும் இதுவரை காணிக்கான ஆவணங்கள் வழங்கப்படவில்லை எனவும், வீதிகள் திருத்தப்படவில்லை எனவும், குடிநீர்வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதிகள் எதுவும் செய்துதரப்படவில்லை எனவும், இதனால் இங்கு வாழமுடியாத நிலையில் பல குடும்பங்கள் வேறு இடங்களில் உறவுகளில் வீடுகளில் சென்று வாழ்ந்து வருவதாகவும், தமது வீடுகளை உரியமுறையில் புனரமைத்து இதர வசதிகளையும் ஏற்படுத்தி தருமாறு மக்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் இதுவரை யாரும் இந்த விடயத்தில் அக்கறை காட்டவில்லை என தெரிவித்து நேற்று மாலை (04-05-2018) துணுக்காய் பிரதேச செயலகம் முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து பிரதேச செயலாளருக்கான மகஜர் ஒன்றினையும் கையளியத்துள்ளனர்.

முன்னதாக துணுக்காய் பேருந்து நிலையத்துக்கு அருகில் ஒன்று கூடிய மக்கள் அங்கிருந்து பிரதேச செயலகம் வரை பேரணியாக சென்று பிரதேச செயலாளருக்கான மகயர் ஒன்றினையும் கையளித்தனர்.

இந்த மகஜரை பிரதேச செயலாளர் இல்லாத காரணத்தால் நிர்வாக உத்தியோகத்தரிடம் கையளித்தனர்.

மகஜரை பெற்றுக்கொண்ட நிர்வாக உத்தியோகத்தர் பிரதேச செயலாளரிடம் கையளித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்வதாக தெரிவித்தார்.

இதன்போது மக்கள் எதிா்வரும் 15 ஆம் திகதிக்கு முன் தமக்கான தீர்வு கிடைக்கவில்லை எனில் பிரதேச செயலகம் முன்பாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகவும் தெரிவித்தனர்.