ஞாயிறு, மே 13, 2018

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு - இன்று முக்கிய முடிவை அறிவிக்கிறார் முதலமைச்சர்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான தமது கோரிக்கையை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஏற்றுக்கொண்டுள்
ளார் என்றும், இது பற்றி அவர் இன்று முடிவை அறிவிப்பார் என்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஸ்ணமேனன் தெரிவித்துள்
   
எதிர்வரும் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் நேற்றுமாலை முதலமைச்சரின் இல்லத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடியதன் பின்னர் பெரிய நம்பிக்கை ஒன்று எமக்கு ஏற்பட்டுள்ளது.இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் உலகிற்கு ஒரு செய்தியை கூறுவதாய் உணர்வெழுச்சியுடன் இடம்பெறும்.இந்த நினைவேந்தல் முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்ட நினைவேந்தலாக இருக்க வேண்டும் என்பதை முதலமைச்சர் ஏற்றுகொண்டுள்ளார், எனினும் நினைவேந்தலை வடமாகாண சபை நடத்துவதா அல்லது யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தலைமையேற்று நடத்துவதா என்பது தொடர்பில் நாளை ஞாயிற்றுக்கிழம முதலமைச்சர் முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளார் என கூறிறார்.
இந்தக் கூட்டத்தில் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.