தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், மே 31, 2018

கட்டுவன் - மயிலிட்டி வீதியில் புதிய தடுப்பு வேலியை அமைக்கும் படையினர்

கட்டுவன்- மயிலிட்டி வீதியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ள படையினர், குறித்த வீதியை மட்டும் விடுவிக்கும் நோக்கி
ல் புதிய தடுப்பு வேலியை அமைத்து வருகின்றனர். வலி. வடக்குப் பிரதேசத்தில் சில பிரதேசங்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் வீதிகள் விடுவிக்கப்படவில்லை. கட்டுவன் சந்தியில் இருந்து மயிலிட்டிச் சந்திக்குச் செல்லும் பிரதான பாதையில் சில மீற்றர் தூரம் மட்டும் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய பிரதேசம் படையினரின் அபகரிப்பிற்குள் உள்ளது.
கட்டுவன்- மயிலிட்டி வீதியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ள படையினர், குறித்த வீதியை மட்டும் விடுவிக்கும் நோக்கில் புதிய தடுப்பு வேலியை அமைத்து வருகின்றனர். வலி. வடக்குப் பிரதேசத்தில் சில பிரதேசங்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் வீதிகள் விடுவிக்கப்படவில்லை. கட்டுவன் சந்தியில் இருந்து மயிலிட்டிச் சந்திக்குச் செல்லும் பிரதான பாதையில் சில மீற்றர் தூரம் மட்டும் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய பிரதேசம் படையினரின் அபகரிப்பிற்குள் உள்ளது.

கடந்த ஏப்ரல் 13 ம் திகதி விடுவிக்கப்பட்ட 683 ஏக்கர் நிலப்பரப்பு காணிகள் பலவற்றிற்குச் செல்லும் பாதைகள் இன்றி நிலம் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து குறித்த விடயம் தற்போது படையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் குறித்த காணிகளிற்குச் செல்லும் பிரதான வீதியை விடுவிக்கும் நோக்கில், படையினர் தமது முட்கம்பி பாதுகாப்பு வேலிகளை தற்போதுள்ள நிலைகளில் இருந்து சுமார் 50 மீற்றர் பின் நகர்த்தி வருகின்றனர். இதன் மூலம் படையினரின் பிடியில் உள்ள 450 மீற்றர் நீள வீதியும் மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் விடுவிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Gefällt mirWeitere Reaktionen anzeigen
Kommentieren