தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

சனி, மே 05, 2018

வடமாகாண அமைச்சு செயலாளர்கள் மாற்றம்! வேந்தன் May 05, 2018 இலங்கை வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் இன்றயதினம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வி அமைச்சின் செயலாளராக விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய சிவலிங்கம் சத்தியசீலன் நியமிக்கப்பட்டார். விவசாய அமைச்சின் செயலாளராக கந்தையா தெய்வேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கான நியமனக்கடிதங்களை ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று வழங்கி வைத்தார். நிகழ்வு இன்று (05) காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆளுநரின் செயலர் இளங்கோவன் உதவிச் செயலர் செல்வநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் இன்றயதினம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி அமைச்சின் செயலாளராக விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய சிவலிங்கம் சத்தியசீலன் நியமிக்கப்பட்டார்.  விவசாய அமைச்சின் செயலாளராக கந்தையா  தெய்வேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர்களுக்கான நியமனக்கடிதங்களை ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று வழங்கி வைத்தார். நிகழ்வு இன்று (05) காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலர் இளங்கோவன் உதவிச் செயலர் செல்வநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.