புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், மே 17, 2018

இலங்கைத்தீவில் மீண்டுமொரு இனஅழிப்புக்கு இடமளிக்க முடியாது! - பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் T

மீண்டுமொரு இன அழிப்பு இலங்கைத்தீவில் நிகழ்வதை அனுமதிக்க முடியாது என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றில் நேற்இலங்கைத்தீவில் மீண்டுமொரு இனஅழிப்புக்கு இடமளிக்க முடியாது! - பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் Tறு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மீண்டுமொரு இன அழிப்பு இலங்கைத்தீவில் நிகழ்வதை அனுமதிக்க முடியாது என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த நினைவேந்தல் நிகழ்வின்போது, பிரித்தானிய நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் முக்கிய உரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து நிழல் நிதியமைச்சர் ஜோன் மக்டொனல், நிழல் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் கேற் ஒசேமோர், சமாதான விவகார நிழல் அமைச்சர் பபியன் ஹமில்டன் ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிபோன் மக்டொனா, ஜொன் ரையன், ஸ்ரீபன் ரிம்ஸ், ஸ்ரீவன் பவுண்ட், வெஸ்ற் ஸ்ரிறீற்ரிங், கரத் தொமஸ், ரான் டேசி ஆகியோரும் உரையாற்றினர்.



இவர்கள் அனைவரது உரையிலும் தமிழ் மக்களுக்கான வாழ்வுரிமை வலியுறுத்தப்பட்டதுடன், இலங்கைத்தீவில் இடம்பெற்ற இன அழிப்பினால் அதிகளவான தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை போன்று மீண்டும் ஒரு யுத்தம் இடம்பெறக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.