தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், மே 03, 2018

ங்குளத்தில் இராணுவத்துக்கு காணி அளவிடும் முயற்சி தடுப்பு! Top News [Thursday 2018-05-03 18:00] முல்லைத்தீவு- மாங்குளம் 574 ஆவது படைப்பிரிவு முகாம் அமைந்துள்ள காணியை இராணுவத்தினருக்கு சுவீகரிப்பதற்காக, அளவீடு செய்யும் பணி இன்று முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு- மாங்குளம் 574 ஆவது படைப்பிரிவு முகாம் அமைந்துள்ள காணியை இராணுவத்தினருக்கு சுவீகரிப்பதற்காக, அளவீடு செய்யும் பணி இன்று முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு 574 ஆவது படைப்பிரிவு முகாம், மக்களின் காணிகளில் அமைந்துள்ளது. இந்த காணிகளை விடுவிக்குமாறு பலதடவை
கள் மக்கள் கோரியும் இந்த காணிகள் இராணுவத்தால் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று நில அளவை திணைக்கள அதிகாரிகள் குறித்த காணியை அளவீடு செய்ய சென்ற போது, மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து இராணுவ முகாம் வாசலில் வைத்து நில அளவீட்டு பணிக்காக சென்ற அதிகாரிகளை திருப்பியனுப்பியுள்ளனர்.
இந்த காணி உரிமையாளர்களான தமக்கு யாருக்கும் அறிவிக்கவில்லை எனவும், இரகசியமான முறையில் அளவீடு செய்து இராணுவத்துக்கு வழங்கும் சதி திட்டமாக இதை பார்ப்பதாகவும், எல்லைப்படுத்தல் நடவடிக்கைக்காக காணிகளை அளவிடுவதாயின் உரிமையாளர்களான எங்களையும் அழைத்து எந்த காணிகளை அளவீடு செய்து எமது காணிகளை எம்மிடம் தருமாறும் மக்கள் இதன்போது தெரிவித்தனர்.