சனி, ஜூலை 07, 2018

தீவுப்பகுதியின் கால்நடை கடத்தல் நபரான அல்லைப்பிட்டி ரூபன் மற்றும் அவரது நண்பர் யோகன் என்பவரும் 107 கிலோ மாட்டிறைச்சியுடன் மண்டைதீவு பொலிஸ் நிலைய சோதனைச்சாவடியில் கைது


 .
நீண்டகாலமாகவே மேற்படி ரூபன் குழுவினர் சில பிரதேச அரசியல்வாதிகளினதும் , சில பொலிஸ் அதிகாரிகளதும் மறைமுக ஆதரவில் சட்டவிரோதமாக இத்தொழிலில் ஈடுபட்டு வந்திருந்தனர் . சரவணை , வடக்கு நாரந்தனை , அல்லைப்பிட்டி , வேலணை கிழக்கு போன்ற பகுதிகளில் இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக தமது கைவரிசையை காட்டியிருந்தனர் .
ஏற்கனவே இக்குழுவில் பலர் மண்டைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
இந்த நபர்கள் இன்று அதிகாலை சரவணைப்பகுதியில் மாடுகளைப் பிடித்து இறைச்சியாக்கி கொண்டுவருவதாக பொலிஸ் அதிகாரி விவேகானந்தராஜ்க்கு கிடைத்த தகவலுக்கமைய சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தி அவர்களை கைதுசெய்ய முற்பட்டபோது அவர்கள் பொலிசாரை தாக்கி விட்டு தப்பிச்சென்ற வேளையிலே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது . மேற்படி இரு நபர்களும் காயமடைந்த நிலையில் தற்சமயம் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .