www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், ஜூலை 05, 2018

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலையில் புதிய திருப்பம், போலீஸ் விசாரணை தீவிரம்

புதுடெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் போலீஸ் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் திணறி வருகிறது.

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை தொடர்பாக விசாரித்து வரும் போலீசார், அவர்களின் வழிபாட்டு முறை வித்தியாசமாக இருந்ததை கண்டுபிடித்தனர். மூட நம்பிக்கையால் நிகழ்ந்த தற்கொலையாக இருக்கலாம் என கருதுகின்றனர். அவர்களது வீட்டில் கைப்பற்றிய சில கையேடுகளும் இதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. இறந்தவர்களின் வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் போலீசார் தீவிரமாக சோதனையிட்ட போது கடிதங்கள் மற்றும் வினோதமான தகவல்கள் சிக்கியது. இதற்கிடையே வீட்டுக்குள் இருந்து 11 குழாய்கள் வெளியே நீட்டிக்கொண்டு இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த குழாய்கள் வேறு எந்த பொருளுடனும் இணைக்கப்படவும் இல்லை. 

11 பேரும் இறந்து கிடந்த அறையில் இருந்துதான் இந்த குழாய்கள் வெளியே நீண்டுகொண்டு இருந்தன. இது குறித்த விவரங்கள் அவர்கள் வைத்திருந்த குறிப்பேடுகளிலும் காணப்பட்டது. அதாவது, ‘தாங்கள் இறந்த பின் தங்களது ஆன்மா சொர்க்கத்துக்கு போக இந்த குழாய்கள் உதவும்’ என குறிப்பிடப்பட்டு இருந்ததாக தெரிகிறது.  நவீன யுகத்திலும் இப்படியெல்லாம் மூட நம்பிக்கையுடன் மக்கள் இருக்க முடியுமா? என்று குழம்பும் அளவிற்கு அங்கிருந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கிடையே 11 குழாய்களும் பதிக்கப்பட்ட விதம் தொடர்பாகவும் குழப்பம் போலீஸ் மத்தியில் இருந்து வருகிறது. இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், மேலும் ஒரு கடிதம் சிக்கியுள்ளது.

போலீஸ் வீட்டில் ஒரு அறையை சோதனையிட்ட போது 2007-ம் ஆண்டு அக்குடும்பத்தின் தலைவர் இறந்தபோது எழுதப்பட்ட கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் தற்கொலை செய்துக்கொண்ட போது வீட்டின் கதவு திறந்துதான் இருந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் விளக்கம் அளிக்கையில், “நாங்கள் இவ்விவகாரத்தில் இரண்டு கோணங்களில் விசாரித்து வருகிறோம், ஒன்று குடும்பத்தினர் தங்களை காப்பாற்றும் சக்தி வாசல் வழியாக வரும் என்று நினைத்து இருக்கலாம், அல்லது 12-வததாக ஒருவர் அங்கிருந்து இருக்கலாம்,” என்று கூறியுள்ளார். வீட்டில் கைப்பற்றப்படும் ஆதாரங்கள் மற்றும் விசாரணைத் தகவல்கள் அனைத்தும் போலீசை குழப்பும் விதமாகவே இன்னும் நீடித்து வருகிறது. 

வீட்டில் கைப்பற்றப்பட்ட அனைத்து கடிதங்களும் உயிரிழந்த லலித் பாதியாவால் எழுதப்பட்டுள்ளது என்பதும், அவரே இந்த கொலைகளுக்கு முக்கியமாக இருந்துள்ளார் என்பதும் தெரிகிறது. லலித் பாதியா, இறந்துபோன தந்தையிடம் பேசிவருவதாகவே கூறியுள்ளார், இதனை அப்பகுதி மக்களும் உறுதி செய்துள்ளனர். ஏற்கனவே வீட்டை ஆய்வு செய்த போலீஸ் அதிகாரி ஒருவர் பேசுகையில், குடும்பத்தினர் பகிர்வு மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தெரிகிறது. உயிரிழந்த லலித் பாதியா இறந்து போன தந்தையிடம் பேசி வந்ததாக கூறியுள்ளார். இதனை குடும்பத்தில் உள்ள அனைவரும் நம்பியுள்ளனர். பாதியா தனது வீட்டுக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை என பக்கத்து வீட்டினர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

அக்கம்பக்கத்தினரிடம் அன்பாக பழகினாலும், வீட்டு விவரங்களை மற்றவர்களுக்கு தெரிவிப்பதில்லை. அவர்கள் அதீத ஆன்மிக நம்பிக்கையில் மூழ்கி இருந்துள்ளனர். அங்கு அவர்களுடைய திட்டங்களை பார்க்கையில்  மூட நம்பிக்கையில் மூழ்கியிருந்ததும், தற்கொலைக்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்ததும் தெரிகிறது என கூறியிருந்தார்.