தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், ஜூலை 26, 2018

தமிழக மீனர்வகளுக்கு சொந்தமான 118 விசைப் படகுகள் விடுவிப்பு

இன்று ஒரே நாளில் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 118 விசைப் படகுகளை நீதிமன்றின் உத்தரவுக்கமைய
இலங்கை கடற்படையினர் விடுவித்துள்ளனர்.
இதன் பிரகாரம் நேற்று முதல் கட்டமாக 50 படகுகளையும் இன்று ஊர்வாவற்த்துறை நீதிமன்றம் 98 படகுகளையும் பருத்தித்துறை நீதிமன்றம் 18 படகுகளையும் மல்லாகம் நீதிமன்றம் 2 படகுகளையுமாக மொத்தம் 118 தமிழக மீனர்வகளுக்கு சொந்தமான விசைப் படகுகளை விடுவித்துள்ளது.
அத்துடன் இவ்வாறு விடுவிக்கப்பட்ட படகுகள் அனைத்தும் வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் படகுகளையும் விரைவில் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2018 பெப்ரவரி மாதம் வரை இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 174 தமிழக மீனவர்களுக்கு சொந்தமான படகுகளையும் விடுவிக்க நடவடிககை எடுத்துள்ள நிலையில் இதன் ஒரு கட்டமாகவே இன்று 118 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது