தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், ஜூலை 19, 2018

மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள 18 குற்றவாளிகளில் 7 பேர் தமிழர்-

ஸ்ரீ தர்மாகரன், முரளிதரன்,சிவனேசன் விநாயக மூர்த்தி,ராஜா,புண்ணியமூர்த்தி,கணேசன்,சுரேஸ் குமார்
மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகளின் பெயர்கள் அடங்கிய ஆவணம், சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போ​தைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட, 18 குற்றவாளிகளின் பெயர்கள் இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதில்,தமிழர்கள் ஏழு பேரின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளது.

2003ஆம் ஆண்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஸ்ரீ தர்மாகரன், 2007ஆம் தீர்ப்பளிக்கப்பட்ட வேலாயுதன் முரளிதரன், 2009 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சிவனேசன் ராஜா, 2012ஆம் ஆண்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள எஸ். புண்ணியமூர்த்தி, எஸ்.கணேசன், மற்றும் 2013ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள டபிள்யு. விநாயக மூர்த்தி மற்றும் எஸ்.ஏ. சுரேஸ் குமார் ஆகியோரும், மரண தண்டனை அமுல்படுத்தப்படவுள்ள குற்றவாளிகளின் பெயர்ப் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்