ஞாயிறு, ஜூலை 08, 2018

வடக்கிற்கும் வருகிறது இந்தியாவின் '1990'அம்பியூலன்ஸ் சேவை!

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன், “1990” சுபாஸ்அரிய எனும் அவசர அம்பியூலன்ஸ் வண்டி சேவை வட மாகாணத்திலும், ஆரம்பிக்கப்படவுள்ளது. இச்சேவை, இம்மாதம் 21ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

'வடமாகாணத்துக்கு 20 அம்பியூலன்ஸ் வண்டிகள் வழங்கப்படவுள்ளன. அவற்றில் யாழ். மாவட்டத்துக்கு 7 அம்பியூலன்ஸ் வண்டிகளும், கிளிநொச்சி மாவட்டத்துக்குகு 4 அம்பியூலன்ஸ் வண்டிகளும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 3 மாவட்டங்களுக்கும் தலா 3 அம்பியூலன்ஸ் வண்டிகள் வீதம் வழங்கப்படவுள்ளன. ஒதுக்கப்பட்ட அம்பியூலன்ஸ் வண்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒதுக்கப்பட்ட நிலையங்களில் நிறுத்தி வைக்கப்படும்.

அவசர அம்பியூலன்ஸ் வண்டி உதவி தேவைப்படுபவர்கள் குறித்த '1990' சுபாஸ்அரிய அவசர அம்பியூலன்ஸ் வண்டி சேவையுடன் தொடர்புகளை ஏற்படுத்தி நோயாளர்களை அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்ல முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.