தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஜூலை 23, 2018

புங்குடுதீவு நலன் புரிச்சங்கத்தின் அனுசரணையுடன் நடைபெறும் குழாய் வழி நீர்வழங்கல் செயல் திடடத்தின் புனரமைப்பும், மீளியக்கமும் - 2018
தீவகம் தெற்கு வேலனை பிரதேசசபையின் நியாயாதிக்க எல்லைக்கு உட்பட்ட புங்குடுதீவு உப பிரதேச சபையினால் 1972ம் ஆண்டு முதல் குழாய் வழியாக பொது தொட்டிகளுக்கும் தனி வீடுகளுக்குமான நீர் வழங்கல் நடவடிக்கையினை வேலணை பிரதேச சபையின் புங்குடுதீவு உப அலுவலகம் வழங்கியிருந்தது. இச்சேவையினால் புங்குடுதீவின் (02ம் 03ம் 10ம் 11ம் 12ம்) 5 வட்டாரங்களை உள்ளடக்கிய மக்களுக்கான நீர்த்தேவையின் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டது.
நீர் வழங்கல் திட்டத்திற்கென புங்குடுதீவு கிழக்கு 10ம் வட்டாரம் J/25 கிராமசேவகர் பிரிவில் உள்ள கண்ணகி அம்மன் கோவிலுக்கு முன்பாக உள்ள காணியில் புங்குடுதீவு உப அலுவலகத்திற்கு இரண்டு கிணறுகள் உள்ளன. இக் கிணறுகளும் பொது இடங்களில் உள்ள 10 நீர் தொட்டிகளும் கடந்த 40 வருடங்களாக பராமரிப்பின்றி சிறு சிறு குறைபாடுகளுடன் காணப்படுகின்றது. அத்துடன் நீர்வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்ட டீசலில் இயங்கக்கூடிய இரண்டு நீர் பம்பிகளும் தற்போது பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. ஆனால் நிலத்துக்கு கீழ் உள்ள குழாய் வழியாக நீர் செல்வதற்கான தடைகள் எதுவும் காணப்படவில்லை. அத்துடன் கிணற்று நீரும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது.
புங்குடுதீவில் ஏற்பட்டுள்ள அதீத நீர்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு புங்குடுதீவு நலன் புரிச்சங்கம் நீர்தொட்டிகளை திருத்தியும், புதிப்பித்தும் கொடுப்பதோடு தேவையான இயந்திரங்களையும் ,மற்றும் உபகரணங்களையும் வாங்குவதற்கு தேவையான நிதியினையும் கொடுக்கவுள்ளது. எனவே இத்திதிட்டத்திற்கு உங்களின் பங்களிப்பை உரிமையோடு எதிர்பார்க்கின்றோம் .

அன்புடன்
புங்குடுதீவு நலன்புரிச்சங்கம் -பிரித்தானியா.
21.07.2018