தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஜூலை 25, 2018

கிரேக்கத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் கட்டியணைத்தபடி 26 சடலங்களை செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கிரேக்கத்தின் மடி(Mati) பகுதியில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த செஞ்சிலுவை சங்க அதிகாரிகளே குறித்த தகவலினை வெளியிட்டுள்ளனர்.
ஏதென்ஸ் அருகே உள்ள கடற்கரை பகுதியில் பரவ ஆரம்பத்த குறித்த காட்டுத்தீயானது இதுவரை 74 உயிர்களை பலிவாங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 156 பேர் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டுள்ளதோடு பலியானோர் எண்ணிக்கை மேலும்  அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மடி(mati)  பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் ஒரே குடும்பத்தினராக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
குறித்த காட்டுத்தீயில் மொத்தமாக நாசமான அந்த கிராமத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்தே 26 சடலங்களையும் மீட்டுள்ளனர்.
கடற்கரையில் இருந்து சுமார் 30 மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள குறித்த குடியிருப்பில் இருந்தவர்கள் தப்பிக்க பல முயற்சிகளும் மேற்கொண்டிருக்கலாம் ஆனால் காலம் கடந்துவிட்டதால் இந்த அதிர்ச்சி முடிவை அவர்கள் எடுத்திருக்கலாம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.