தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஜூலை 23, 2018

ரொறன்ரோ பகுதியை உலுக்கிய துப்பாக்கி சூடு – 2 பேர் உயிரிழப்

ரொறன்ரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 2 ஆக அதிகரித்துள்ளது.

ரொறன்ரோவின் கிழக்குப் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், பொலிஸார் 29 வயது மதிக்கத்தக்க துப்பாக்கிதாரியை சுட்டு கொன்றனர்.

மேலும் இதில் படுகாயமடைந்த 9 வயது சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 13 பேர் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இதில் உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.