தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், ஜூலை 19, 2018

வடக்கில் 35 இராணுவ முகாம்களை அகற்ற நடவடிக்கை

வடக்கில் 35 இராணுவ முகாம்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூட்டு எதிரணி நாடாளுமன்ற உ
றுப்பினர் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.“ எமக்கு தெரிந்த உண்மையான தகவல்களுக்கு அமைய இப்போது வரையில் வடக்கில் 39 இராணுவ முகாம்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. வடக்கு கிழக்கில் மொத்தமாக 100 இராணுவ முகாம்களை அகற்ற நடவடிக்கைகளை எடுக்கப்படுகின்றது. இராணுவத்தில் இருக்கும் 25 வீத படையணியினரை நீக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நடவடிகைகள் மூலமாக இராணுவத்தை பலவீனபடுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
இதனை அரசியல் காரணியாக கருதக்கூடாது. இராணுவத்தின் உள்ளேயே பலவீனமானதும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதன் மூலமாக தேசிய பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும். ஆகவே உரிய அமைச்சர்கள் உடனடியாக இந்த நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்