தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஜூலை 25, 2018

3 மணிநேரம் பொலிஸ் விசாரணையில் சிக்கிய விஜயகலா

விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டுமென உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் திட்டமிடப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸ் பிரிவு அதிகாரிகள் நேற்று 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். நேற்று மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரை இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது, தான் ஐக்கிய தேசியக் கட்சியின் எழுச்சிக்காகவேயன்றி , விடுதலைப் புலிகள் அமைப்பின் மீளெழுச்சிக்காக உரையாற்றவில்லையென்றும், குறித்த உரையின் பின்னர் இடம்பெற்ற சம்பவங்களின் பின்னரே, அந்த உரை கடுமையானதொன்றென தான் உணர்ந்ததாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா தெரிவித்திருப்பதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.