தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஜூலை 25, 2018

சென்னை பரங்கிமலையில் கூட்ட நெரிசலால் ரெயிலில் இருந்து விழுந்து 4 பேர் பலி

சென்னை பரங்கிமலையில் கூட்ட நெரிசலால் ரெயில் படியில் தொங்கியபடி சென்ற 4 பேர் கீழே விழுந்து பலியாகி உள்ளனர்.

சென்னையில் கோடம்பாக்கம் முதல் மாம்பலம் இடையே புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்துள்ளது.  இதனால் புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து ரெயில்வே நிர்வாக ஊழியர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் புறநகர் ரெயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன.
குறைவான ரெயில்கள் இயக்கம், காலதாமதம் ஆகியவற்றால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் கடற்கரையில் இருந்து திருமால்பூர் நோக்கி சென்ற ரெயிலில் படியில் தொங்கியபடி பலர் பயணம் செய்துள்ளனர்.  அவர்களில் 4 பேர் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நடைமேடை தூணில் மோதி அடிபட்டு பலியாகி உள்ளனர்.
அவர்களில் பிரவீன் குமார், பரத், சிவகுமார் ஆகியோர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.