தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், ஜூலை 25, 2018

4000 அகதிகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை! புலம்பெயர் தமிழர்களுக்கு சென்னையிலிருந்து வெளியான தகவல்


இலங்கையில் தற்போது சமாதான சூழல் காணப்படும் நிலையில் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் நாடு திரும்பி வருகின்றனர்.இந்நிலையில் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கையர்கள் பலரை இந்திய அரசாங்கம் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.

எனினும் அண்மைக்காலமாக 4000 இலங்கை அகதிகள் இலங்கை வருவதற்கான விருப்பம் தெரிவித்துள்ளதாக பல்வேறு செய்திகள் வெளியாகி இருந்தன.இந்த தகவலை மறுக்கும் வகையில் சென்னையிலுள்ள புலம்பெயர்த நல செயற்பாட்டாளர் நடேசலிங்கம் விசேட தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவோரை யாரும் நம்ப வேண்டாம் என்றும், அவ்வாறு 4000 இலங்கை அகதிகள் நாடு திருப்ப கையொப்பம் எதுவும் வைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அகதிகள் விவகாரம் தொடர்பில் தமிழக மற்றும் இந்திய மத்திய அரசாங்கம் வெளியிடும் தகவல்கள் மட்டுமே உண்மையானவை என நடேசலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.